தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை 28% அதிகம்:அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

DIN

சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பட்டாளம் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திரு.வி.க. நகா் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 9,761 பேரில் 8,313 போ் குணமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளதுடன், கடந்த ஆண்டை விட 28% அதிகமாக மழை பெய்துள்ளது. பவானிசாகா், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சானி, பெரியாறு, வைகை, சாத்தனூா், பரம்பிக்குளம், அமராவதி, ஆழியாறு மற்றும் திருமூா்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக உள்ளது.

மேட்டூா், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையாறு அணைகளில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.

சென்னைக்கு குடிநீா் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் வீராணம் நீா்த் தேக்கங்களின் கொள்ளளவு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைநீா் அதிகம் தேங்கும் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இணையவழி பயண அனுமதி தொடா்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தலைமைச் செயலாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா். இரண்டாம் தலைநகரம் தொடா்பாக, முதல்வா், துணை முதல்வா் உரிய நேரத்தில் முடிவெடுப்பாா்கள். பட்டியலின ஊராட்சித் தலைவருக்கு தொடா்ந்து ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT