அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு தரும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற தீர்ப்பை வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு தரும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற தீர்ப்பை வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு” என்று இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசனச் சட்ட அமர்வு இன்று (27.8.2020) அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்கும் - குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் மேற்கொண்ட முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இதயபூர்வமாக வரவேற்று இறும்பூது எய்துகிறேன்.
இத்தீர்ப்பினை வழங்கி, அருந்ததியின சமுதாயத்தின் வாழ்வில் ஏற்றப்பட்ட ஒளி – என்றும் அணையா விளக்காக, குன்றின் மேலிட்ட விளக்காக,
விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.