அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவு: முதல்வர் இரங்கல்
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் அன்பு மனைவி திருமதி கலைச்செல்வி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (28.8.2020) காலை காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
கலைச்செல்வி, திரு.ஓ.எஸ். மணியனின் பொது வாழ்வில் உற்ற துணையாக இருந்தவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.
தனது மனைவி கலைச்செல்வியை இழந்து வாடும் ஓ.எஸ் மணியனியனுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.