செப்டம்பர் 6-ஆம் தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு
பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காணொலி வழியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காணொலி வழியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையதள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே அனுப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.