முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.89 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,665 கன அடியிலிருந்து 4,513 கன அடியாக சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 93.89 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,665 கன அடியிலிருந்து 4,513 கன அடியாக சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அணையின் நீர் இருப்பு 57.20 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →