பொதுமுடக்கம் நீட்டிப்பு? மருத்துவக் குழுவுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை
பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பின்னர் மருத்துவக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடுபொதுமுடக்கம் நீட்டிப்பு? மருத்துவக் குழுவுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை
பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பின்னர் மருத்துவக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பின்னர் மருத்துவக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின் தற்போது மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரை முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இ-பாஸ் நடைமுறை, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகக் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொது முடக்கத்தால் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தளா்வுகளும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் செப்டம்பா் மாதத்தில் எத்தகைய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.