தமிழ்நாடு

வலிவலத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

DIN

வலிவலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா, வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட உடையார் குளக்கரையின் மேற்புறம் அமைந்துள்ள ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் என்கிற ஸ்ரீ மஞ்சள் விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாக பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கின.

அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையான  இன்று   காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜையும் 9.10 மணிக்கு பூர்ணாஹூதி யாத்ராதானம், 9. 45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவரான மஞ்சள் விநாயகருக்கு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT