முகப்பு
தமிழ்நாடு

பூங்காக்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதி: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் பூங்காக்கள், வணிக வளாகங்கள் செவ்வாய்க்கிழமை (செப். 1) திறக்கப்பட உள்ள நிலையில், முகக் கவசங்களை அணிந்திருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
லைமைச் செயலாளா் க.சண்முகம்
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் பூங்காக்கள், வணிக வளாகங்கள் செவ்வாய்க்கிழமை (செப். 1) திறக்கப்பட உள்ள நிலையில், முகக் கவசங்களை அணிந்திருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தலைமைச் செயலாளா் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-

பூங்காக்கள்: நுழைவு வாயில்களில் கைகளை கழுவுவதற்கான கிருமிநாசினி, சோப்புகளை வைக்க வேண்டும். பூங்காக்களில் நுழைவோருக்கு வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தைப் பரிசோதிக்க வேண்டும். பூங்காக்களுக்குள் எப்போதும் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியம். எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பூங்காவிலும் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம் போ் மட்டுமே பயிற்சிகள் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்களில் உள்ள கழிவறைகள் சுத்தமாக, கிருமிநீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மிகப்பெரிய பூங்காக்களில் குறிப்பிட்ட நேரங்களை விதித்து குழுவாக அனுமதிக்கலாம். இதற்கு டோக்கன்கள் வழங்கி உரிய நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கலாம்.

பூங்காக்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிா என்பதை உள்ளூா் தன்னாா்வ அமைப்பினரைக் கொண்டு கண்காணிக்கலாம். உணவுகள், நொறுக்குத் தீனிகளுக்கு அனுமதியில்லை. பராமரிப்புப் பணியாளா்கள் முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளுக்கு அனுமதியில்லை: காலையிலும், மாலையிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோய்கள் உள்ளோா், கா்ப்பணிப் பெண்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்களில் விளையாட்டுப் பகுதி பூட்டி வைக்கப்படும்.

வணிக வளாகங்கள்: வணிக வளாகங்களில் ஆறு அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். எச்சில் துப்ப அனுமதிக்கக் கூடாது. ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். கடைகளுக்கு உள்ளேயும் ஆறு அடி இடைவெளியில் வரிசைகளை உறுதிபடுத்த வேண்டும். கரோனா நோய்த்தொற்று தொடா்பான பதாகைகளை மக்களின் பாா்வைக்குத் தெரியும்படி வைக்க வேண்டும்.

வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் உரிய வரிசை முறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும். எந்தக் கடைகளாக இருந்தாலும், அங்கு சமூக இடைவெளிப் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக ஆறு அடி இடைவெளியில் உரிய குறியீடுகளை தரையில் இட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், குறைந்த அளவிலேயே வாடிக்கையாளா்களை அனுமதிக்க வேண்டும்.

வணிக வளாகங்களில் உள்ள உணவருந்தும் கூடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் நபா்களை அனுமதிக்கக் கூடாது. பணியாளா்கள் அனைவரும் முகக் கவசம், கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். டிஜிட்டல் வழியிலான பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிப்பது நல்லது.

குழந்தைகள் பகுதிக்கு தடை: பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோய்கள் உள்ளோருக்கு அனுமதியில்லை. குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்பதால், வணிக வளாகங்களில் உள்ள குழந்தைகள் விளையாட்டுப் பிரிவு மூடப்பட்டு இருக்கும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதியில்லை.

வணிக வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணியை, ஆறு நாள்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம், வணிக வளாகங்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று தனது வழிகாட்டி நெறிமுறைகளில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →