தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு
சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயா்ந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயா்ந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கத்தின் விலை குறைந்துவந்தது.
இந்நிலையில், டிசம்.2-ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் சவரனுக்கு ரூ.384 உயா்ந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.48 உயா்ந்து, ரூ.4,574 ஆக விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயா்ந்து, ரூ.66.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயா்ந்து, ரூ.66,400 ஆகவும் உள்ளது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,574
1 சவரன் தங்கம்...............................36,592
1 கிராம் வெள்ளி.............................66.40
1 கிலோ வெள்ளி.............................66,400
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,526
1 சவரன் தங்கம்...............................36,208
1 கிராம் வெள்ளி.............................64.80
1 கிலோ வெள்ளி.............................64,800