முகப்பு
தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்தவரின் பணம் மீட்பு
தமிழ்நாடு

தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்தவரின் பணம் மீட்பு

குழந்தையின் தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13,000/- செலுத்தி ஏமாந்தவருக்கு , கீழ்பாக்கம் சைபர் கிரைம் உதவியால் வங்கியிலிருந்து பணம் பெற்று தரப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்தவரின் பணம் மீட்பு
பகிர்:

சென்னை: குழந்தையின் தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13,000/- செலுத்தி ஏமாந்தவருக்கு , கீழ்பாக்கம் சைபர் கிரைம் உதவியால் வங்கியிலிருந்து பணம் பெற்று தரப்பட்டது.

இது குறித்து கீழ்ப்பாக்கம் இணையதளக் குற்றத் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை, செனாய் நகர், அப்பாராவ் தோட்டடத்தைச் சேர்ந்த மணிவண்ணன் தனது குழந்தையை ரோபோடிக் என்ற ஆன்லைன் வகுப்பில் சேர்ப்பதற்காக இணையதளத்தில் தேடி ஒரு நபரை தொடர்பு கொண்ட போது, அவர் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மணிவண்ணன் தனது கனரா வங்கி கணக்கிலிருந்து கூகுள் பே மூலம் ரூ.13,000/- செலுத்தியுள்ளார். பின்னர் அவரது செல்லிடப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போது அது தொடர்ச்சியாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இது குறித்து மணிவண்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் சமீபத்தில் சென்னை பெருநகர காவல் அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்த சைபர் கிரைம் பிரிவின் கீழ்பாக்கம் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்  மு.அதிவீரபாண்டியன் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரை ஏமாற்றி ஆன்லைன் மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. உடனே, மேற்படி சைபர் கிரைம் காவல் குழுவினர் இதுகுறித்து கனரா வங்கிக்கும், ரோபோடிக் நிறுவனத்திற்கும் மேற்படி மணிவண்ணன் பணத்தை மீள திருப்பி கொடுக்கும்படி விதிகளுக்குட்பட்டு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.

அதன் பேரில் கனரா வங்கி நிர்வாகத்தினர், மணிவண்ணன் கணக்கிற்கு மேற்படி பணம் ரூ.13,000/-ஐ திரும்ப செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த மணிவண்ணன் சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு கீழ்பாக்கம் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →