அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயரத்தி வழங்குதல் ,வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வாய்ப்பு, வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் பகுதி 1 கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அகஸ்தியராஜன் தலைமை வகித்தார். சுரேஷ் பாபு, ரவீந்திரன், இசக்கி ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.