முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் தொடர் மழை: நெற் பயிர்கள் சாய்ந்தன

தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்வதால் சில இடங்களில் கதிர் விட்ட நிலையில் இருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் சாய்ந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
தஞ்சாவூர் அருகே மேல உளூரில் கதிர் விட்ட நிலையில், காற்றுடன் கூடிய தொடர் மழையால் சாய்ந்த நெற் பயிர்கள்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்வதால் சில இடங்களில் கதிர் விட்ட நிலையில் இருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் சாய்ந்தன.

புதன்கிழமை மாலை முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
மஞ்சளாறு 98, பட்டுக்கோட்டை 86, திருவிடைமருதூர் 80.4, அதிராம்பட்டினம் 77.1, அணைக்கரை 70.8, மதுக்கூர் 67.4, அய்யம்பேட்டை 67, பாபநாசம் 66.2, நெய்வாசல் தென்பாதி 64.2, கும்பகோணம் 61, ஒரத்தநாடு 59.5, பேராவூரணி 56, தஞ்சாவூர் 55.8, வல்லம் 55, வெட்டிக்காடு 53.7, பூதலூர் 42.2, திருவையாறு 38, குருங்குளம் 37, திருக்காட்டுப்பள்ளி 30.4, ஈச்சன்விடுதி 30.2, கல்லணை 29.2. 

மாவட்டத்தில் சராசரி மழையளவு 58.34 மி.மீ.
தொடர்ந்து வியாழக்கிழமையும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றுடன் பலத்த மழையும் பெய்வதால், தஞ்சாவூர் அருகேயுள்ள சூரக்கோட்டை, மேல உளூர், தென்னமநாடு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் கதிர் விட்டு சில வாரங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த முன் பட்ட சம்பா பயிர்கள் சாய்ந்தன. எனவே, மகசூல் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். 

மேலும், கதிர் விடும் தருவாயில் உள்ள பயிர்களிலும் தொடர் மழை காரணமாக காய் பிடிக்காமல் பதராகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதேபோல, இளம் சம்பா பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.  

காற்றுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நீடித்தால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →