முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 8 இடங்களில் கொட்டித் தீர்த்த அதீத கனமழை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8 இடங்களில் 20 செ.மீ.க்கும் மேல் அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2020 at 3:56 PM
தமிழகத்தில் 8 இடங்களில் கொட்டித் தீர்த்த அதீத கனமழை
பகிர்:


சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8 இடங்களில் 20 செ.மீ.க்கும் மேல் அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் 20 செ.மீ.க்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்க கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே விலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே  நிலை கொண்டுள்ளது.

Advertisement

இது  மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றும் அதையெட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த சில நேரங்களில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பரங்கிப்பேட்டை (கடலூர்) 26 செ.மீ. மழையும் மணல்முடி மற்றும் குறிஞ்சிப்பாடி (கடலூர்) 25 செ.மீ. மழையும்,

திருத்துறைப்பூண்டி  (திருவாரூர்) 22 செ.மீ. மழையும் சீர்காழி  (நாகை) குடவாசல் (திருவாரூர்) 21 செ.மீ. மழையும் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ. மழையும்,

பேராவூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறையில் 19 செ.மீ. மழையும் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை (தஞ்சை) 17 செ.மீ. மழையும் மதுக்கூர்  16 செ.மீ. மழையும் ஸ்ரீமுஷ்ணத்தில் 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.