தமிழ்நாடு

வீடூர் அணை நிரம்பியதால் திறப்பு: 600 கன அடி நீர் வெளியேற்றம்

DIN

விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணை, தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து அணையில் இருந்து 600 கன அடி உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 29 அடியாக இருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முழு கொள்ளளவான (32 அடியை) எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை நிரம்பியதை அடுத்து சனிக்கிழமை காலை 5 மணிக்கு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

அணையின் 4,5,6 ஆவது கதவணைகள் வழியாக 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வீடூர் அணையின் கதவணைகள் வழியாக வெளியேற்றப்படும் நீர்.

இதையடுத்து அணையின் அருகே உள்ள 12 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மழைக்காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வழியாக புதுச்சேரி பத்து கண்ணு, வில்லியனூர் பகுதி வழியாக சென்று கடலில் கலக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT