முகப்பு
தமிழ்நாடு

'ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே‌. வடமலைபாளையம் ஊராட்சி புத்தரச்சல் கிராமத்தில் ஆனைமலையாறு - நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
புத்தரச்சல் கிராமத்தில் ஆனைமலையாறு - நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
பகிர்:

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் வே‌. வடமலைபாளையம் ஊராட்சியில் புத்தரச்சல் கிராமத்தில் ஏர்முனை இளைஞர் அணியின் பெயர்ப்பலகை மற்றும் ஏர்க்கொடி ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அங்குள்ள அங்காளம்மன் திருமண மண்டபத்தில் ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் பிஏபி பாசனப் பரப்பு கிராமங்களில் ஆனைமலையாறு - நல்லாறு விழிப்புணர்வு பெயர்ப் பலகை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காட்டூர் பஞ்சாயத்தில் 11 ஊர்களில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதியும் வே.வடமலைபாளையம் மற்றும் கள்ளிப்பாளையம் பஞ்சாயத்தில் 16 ஊர்களில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதியும் விழிப்புணர்வு பெயர் பலகைகள் திறப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சி சார்பாற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவர் என் எஸ் பி.வெற்றி, வே.வடமலைபாளையம்சுரேஷ், கள்ளிப்பாளைம் சம்பத்குமார், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ராசு, தங்கவேல், ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.