திருப்புத்தூர்: தென்கரையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிவகங்கை மாவட்ட பாஜக வழக்குரைஞர் அணி செயலாளர் முருகேசன் தலைமையில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மாவட்ட பாஜக விவசாய அணி நல்ல ஜீவானந்தம், ஒன்றிய பட்டியல் அணி மங்கல ராஜா, வீரமணி, ஒன்றிய விவசாய அணி செல்வம், அதிகாரம் ராஜா, ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, கிளாமடம் சின்னையா, பொன்னாங்குடி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.