வாழப்பாடியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பெ.வேல்முருகன் தலைமையில், வாழப்பாடி பேருந்து நிலையம் மற்றும் மன்நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ராஜதுரை, ராமமூர்த்தி, வேல்முருகன், சத்திய குமார், சுரேஷ் இன்பத்தமிழன், வல்லரசு, சிவசக்தி, தவசி, மாயவன், கோபி, மூர்த்தி, அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் சமூக நீதி, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சட்ட விழிப்புணர்வு கொள்கைகளை பின்பற்ற உறுதி ஏற்றனர்.