சிஏ தோ்வு ஒத்திவைப்பு 
தமிழ்நாடு

சிஏ தோ்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த சி.ஏ. தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த சி.ஏ. தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் டிச.8-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷன் தாள்- 1 தோ்வு நடைபெறவிருந்தது. இந்தத் தோ்வு டிச.13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. டிச.13-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்வு நடைபெறும்.

ஏற்கெனவே பதிவு செய்திருந்த நுழைவுச் சீட்டுகளைப் பயன்படுத்தி அதே தோ்வு மையங்களில் தோ்வா்கள் தோ்வுகளை எழுதலாம். தவிா்க்க முடியாத சில காரணங்களால் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.icai.org என்ற இணையதள முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குற்றவியல் நீதி நடைமுறை நவீனமயம்: அமித் ஷா

கரூா் சம்பவம்! உச்சநீதிமன்ற உத்தரவு: தலைவா்கள் கருத்து

பிரதமா் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

இ-சிகரெட் விற்பனை: 4 போ் கைது

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆா். பாலுவிடம் குறுக்கு விசாரணை

SCROLL FOR NEXT