விவசாயிகளுக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் கடையடைப்பு
புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சத்தியமங்கலம் கடைவீதி, மைசூர் டிரங் ரோடு, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதியில் வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டன. தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படவில்லை. தமிழகம் - கர்நாடகம் இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஓரிரு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டநிலையில் பயணிகள் குறைந்தளவே இருந்தனர். எப்போதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து செல்லும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்டது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பாதுகாப்புப் பணிக்காக ஆயுதப்படை காவலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர்.