நடிகை சித்ரா 
தமிழ்நாடு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா(28) தற்கொலை செய்துகொண்டார். 

DIN



சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா(28) தற்கொலை செய்துகொண்டார். 

திருவான்மியூரை சேர்ந்த சித்ரா சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார். 

இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் தங்கியிருந்த சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

ஜனவரி மாதம் ஹேமந்த்துடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் சின்னத்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT