முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் பயிர்ச் சேதங்களை நேரில் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் நிவர், மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
திருவாரூரில் பயிர் சேதங்களை நேரில் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் நிவர், மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

நாகை மாவட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கக்காலடி கிராமத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, வயலுக்குள் இறங்கி சென்றார். அங்கு நீரில் மூழ்கிய அழிந்த பயிர்களை விவசாயிகள்  எடுத்துக் காண்பித்து சூள்கட்டும் தருணத்தில் இருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக மூழ்கி இருப்பதை எடுத்துக் கூறினர்.

பின்னர் பாமணி கிராமத்தில் பயிர்கள் நீரில்மூழ்கி உள்ளதையும் பார்வையிட்டார்.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின்னர் சாயிராம் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் இருந்தவர்களை தேவையான வசதிகள் வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்.

பின்னர் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு  நிவாரணப் பொருட்களையும் அங்குள்ள உணவுக் கூடத்தில் பயனாளிகளுக்கு உணவுகளை பரிமாறினார்.

பின்னர் கச்சனம் கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்று அங்கு நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர்ஆர். காமராஜ் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →