முகப்பு
தமிழ்நாடு

தனியார் சிமெண்ட் ஆலையில் வருமான வரித் துறையினர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள தனியார் சிமெண்ட் ஆலை.
பகிர்:


அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

வருமான வரி செலுத்துவதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு புதன்கிழமை 3 வாகனங்களில் வந்த 15 வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் உள்ள கோப்புகளை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியில் 15 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆய்வானது சுமார் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என வெளிவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →