முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47% அதிகம்: வானிலை மையம்

சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47% அதிகம்: வானிலை மையம்
பகிர்:


சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்றைய நாள் வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 39.6 செ.மீ. ஆகும். ஆனால், இதே காலக்கட்டத்தில் இந்த ஆண்டு பெய்திருக்கும் மழையளவானது 43.1 செ.மீ. ஆகும். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவ மழை 9% அதிகமாகப் பெய்துள்ளது. 

சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.  இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் பெய்திருக்கும் மழையளவானது 102.9 செ.மீ. ஆகும்.

வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →