தமிழ்நாடு

தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு ஆணை

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கடந்த மாதம் 16ஆம் தேதி, இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியின் எதிரொலியாக, நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும்700க்கும் மேற்பட்டவர்களுக்கு, பத்திரம் இருந்தும், பட்டா வழங்கப்படவில்லை. நகர நிலவரித் திட்டத்தை ஏற்படுத்தினால், பட்டா வழங்கலாம். திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட நகராட்சிகளில் நில வரித் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதற்குரியப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், கூத்தாநல்லூர் நகராட்சியில் மட்டும் தொடங்கப்படவில்லை என்ற செய்தியை, தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டன.

செய்தியின் எதிரொலியாக, கூத்தாநல்லூர் நகராட்சியில், நிலவரித் திட்டப் பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி நகரத்தில் நடைபெற்ற நகர நிலவரித் திட்டப் பணிகள் முடிவு பெற்றது. அதைத் தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகரத்தில் வருவாய் பின் தொடர் பணிகளை மேற்கொள்ளவும், புதிய நகர வருவாய் பின் தொடர் பணி நிலவரித் திட்ட வட்டாட்சியர் டிசம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, நகர நிலவரித் திட்ட வட்டாட்சியர், நிலவரித் திட்ட ஆய்வாளர்கள், சார் ஆய்வாளர், நில அளவர், முதுநிலை வரைவாளர், அலுவலக உதவியாளர் மற்றும் புல உதவியாளர் உள்ளிட்டவர்களை நியமனம் செய்யப்படுவார்கள். அதைத்தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகரத்தில், நிலவரித் திட்டப் பணிகள் நடைபெறும். நில வரித் திட்டத்தால், பத்திரம் இருந்தும் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். 

ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள். பட்டா பெறப்படுவதால், அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT