முகப்பு
தமிழ்நாடு

நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு 

தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
 
புரெவி புயல் காரணமாக, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், கடலூர், நாகை மாவட்டத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி நேற்றுமுதல் புயல் காரணமாக பாதிகப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 

இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நிவர் புயலால் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை சீர் செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →