கடத்திச் செல்லப்பட்ட மினி லாரி 
தமிழ்நாடு

ஒரகடத்தில் இருந்து உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற மினி லாரி காஞ்சிபுரம் அருகே  கடத்தல்

ஒரகடத்தில் இருந்து  இருசக்கர ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மினி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். 

DIN


காஞ்சிபுரம்: ஒரகடத்தில் இருந்து  இருசக்கர ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மினி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சித்தராமையா மகன் மஞ்சுநாதா(28). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இருந்து மினி லாரியில் இரு சக்கர வாகனங்களுக்கான ஹேன்பார் ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே கீழம்பி சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றபோது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த மினி லாரியை கடத்திச் சென்றுவிட்டது. வாகனத்தை பல மணி நேரம் தேடியும் காணவில்லை. 

இதுசம்பந்தமாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் மஞ்சுநாதா புகார் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்க்க பார்க்க புதுமை.... அனைரா குப்தா!

வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மலையாளக் கவிதை... அஸ்வதி!

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

SCROLL FOR NEXT