ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் அரசியல்!
நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த பிறந்தநாள் அனைவரது மத்தியிலும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 'இப்போ இல்லனா எப்பவும் இல்ல' என்பதை வலியுறுத்தும் ஆங்கில வாசக அமைப்பு கொண்ட கேக்கை வெட்டி ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார்.
அரசியலில் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், 'இப்போ இல்லனா எப்பவும் இல்ல, மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்' என்ற வாசகத்தையே தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். இதுவே அவரது பிறந்தநாள் கேக்கிலும் வெளிப்பட்டுள்ளது.