முகப்பு
தமிழ்நாடு

விராலிமலை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
விராலிமலை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விராலிமலை அடுத்த கொடும்பாளூர் வடகாடு அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த நான்கு பேரில் மதுரையை சேர்ந்த பைசல், ரிசாத் மற்றும் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் ஆகிய மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயங்களுடன் சுயநினைவை இழந்த முகமது கபியுல்லா என்பவர் ஆபத்தான  நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →