முகப்பு
மணப்பாறை அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்று படுயாகமடைந்த பெண்
தமிழ்நாடு

மணப்பாறையில் ராணுவ வீரர்கள் பயிற்சி: குண்டு பாய்ந்து பெண் படுகாயம்

மணப்பாறை அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற பெண் கால் தொடையில் குண்டுபாய்ந்து படுகாயம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மணப்பாறை அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்று படுயாகமடைந்த பெண்
பகிர்:

மணப்பாறை அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற பெண் கால் தொடையில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூர் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையம் வீரமலை வனப்பகுதியில் ஐ.என்.எப் சிறப்பு படையினர் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்ச்சியில் ஈட்படவுள்ளனர்.

எனவே அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்கு கால்நடைகளையும் அழைத்து செல்ல வேண்டாம் என கடந்த 2-ஆம் தேதி திருச்சி மாவட்டம் ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார். வருவாய்த்துறையினர் மூலம் தண்டோரோ போட்டு அப்பகுதி கிராமங்களில் அறிவிப்பும் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு மலையடிவாரத்தில் வசித்து வரும் வெள்ளைக்கண்ணு மனைவி நல்லம்மாள், மேய்ச்சலுக்கு சென்ற தனது கால்நடை வீடு திரும்பாததையடுத்து அதனைத் தேடி மலை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது இராணுவ வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் நல்லம்மாள் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டு உரசி பாய்ந்ததில் படுகாயமடைந்தார்.

அதனைத்தொடர்ந்து நல்லம்மாள் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நல்லம்மாள் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →