முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை: கமல்ஹாசன்

தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவும் இனி தமிழகத்துக்கு செய்ய வேண்டியதைப் பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
பகிர்:

தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவும் இனி தமிழகத்துக்கு செய்ய வேண்டியதைப் பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், 

மக்களின் வாழ்த்துகளுடன் இன்று பிரசாரத்தைத் துவங்குகிறோம். பல இடங்களில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். எங்கள் பிரசாரம் தொடங்கி விட்டதாவே கருதுகிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம். 

புதிய ஒரு சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் தேர்தல் பிரசார நிலைப்பாடாக இருக்கும். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அது மக்களுக்கும் தெரியும். மீண்டும் அதை புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை 

இனி செய்யவேண்டியதை பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் என்று பேசியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →