முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி அருகே தேவராயன் ஏரியில் கருவேல மரங்கள், களர் செடிகள் அகற்றும் பணிகள் தொடக்கம்

சங்ககிரி அருகே தேவராயன் ஏரியில் கருவேல மரங்கள், களர் செடிகள் அகற்றும் பணிகள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் தொடங்கப்பட்டன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தேவராயன் ஏரியில் கருவேலம் மரங்கள், களர் செடிகள் அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள சங்ககிரி பப்பளிக் சேரிடபுள் டிரஸ்ட் மற்றும் அரிமா சங்கங்களின் நிர்வாகிகள். 
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, சின்னாகவுண்டனூர் ஊராட்சி, ஈரோடு பவானி பிரிவு சாலை அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிக்க சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன. 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சின்னாகவுண்டனூர் ஊராட்சியில் உள்ள பழமை வாயந்த சுமார் 4 ஏக்கர் பரப்பரளவு கொண்ட தேவராயன் ஏரியில் மழைநீரை சேமிப்பதற்காக ஊராட்சியின் அனுமதியின் பேரில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், தேவையற்ற களர் செடிகளை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் ராகவன், கணேஷ்,  கார்த்திகேயன், பன்னீர்செல்வம், சரவணன், கதிர்வேல், வெங்கடேஷ், சங்ககிரி அரிமா சங்கத தலைவர் வெங்கடாஜலம், நிர்வாகிகள் எஸ்டி, கார்த்தி, கோட்டை அரிமா சங்கத் தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் செயலர் ரமேஷ், அருள்  உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

குளத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதையடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கருவேல மரங்கள், களர்செடிகளை முழுமையாக அகற்றும் வரை இப்பணிகளில் ஈடுபட போவதாக பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். பழமை வாய்ந்த நீர் தேக்கமான ஏரியில் குளத்தில் உள்ள கருவேல மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு பல்வேறு பொது நல அமைப்புகளின் தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →