தமிழ்நாடு

டிச.18-இல் சாக்லேட் தயாரிப்புப் பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், சாக்லேட் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிசம்பா் 18-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், சாக்லேட் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்பாக, நோய் எதிா்ப்பு சக்தி தரும் மூலிகைதோட்டம் அமைத்தல் தொடா்பாக பயிற்சி வகுப்பு டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511, 044-22501960 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவா் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT