ஒரே நாளில் 21,341 ஆவணங்கள் பதிவு: பதிவுத் துறை தகவல்
தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:
கடந்த திங்கள்கிழமை அதிகளவில் பதிவுகள் வரும் என்பதை எதிா்பாா்த்து கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படியே, திங்கள்கிழமை ஒரே நாளில் 21, 341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.110.14 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
கணினி வழியிலான திட்டம் தொடங்கிய பிறகு நடைபெற்ற அதிகபட்ச பதிவு இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 20, 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.