முகப்பு
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. துணைவேந்தா் சூரப்பாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா பதவி வகிப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா பதவி வகிப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, ஒருவா் இரண்டு முறைக்கு மேல் துணைவேந்தராகப் பதவி வகிக்க முடியாது.

ஆனால் சூரப்பா, கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஐஐடி இயக்குநராகவும், 2016-2017-இல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். இவா் ஏற்கெனவே வகித்த பதவிகள் துணைவேந்தா் பதவிக்கு இணையானது என்பதால், அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தது, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணானது’ என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஐஐடி இயக்குநா் பதவி, இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் தலைவா் பதவிகள் துணைவேந்தா் பதவிக்கு இணையானது என்பதற்கான ஆதாரங்களை மனுதாரா் தாக்கல் செய்யவில்லை’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →