குன்னுார் வெலிங்டனில் 60 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம்
இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான பயற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சியை பாராட்டினார். கரோனா தொற்று காலத்தில் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையு
நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், புதன்கிழமை 60 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு, நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பும் நிகழ்ச்சி துணை கமாடன்ட் பி.என். நாயக் தலைமையில் நடைபெற்றது.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 60 பேர், ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. பயிற்சி முடித்து செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உள்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட துணை கமாடன்ட் பி.என்.நாயக் பேசும் போது: இளம் ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த தரமான பயிற்சி அடைந்ததை பாராட்டினர். மேலும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான பயற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சியை பாராட்டினார். கரோனா தொற்று காலத்தில் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறினார்.
மேலும் கரோனா தொற்று காரணமாக இந்த சிறப்பு மிகு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.