முகப்பு
தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே இரு கார்கள் மோதி விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
விபத்துக்குள்ளான கார்.
பகிர்:


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

மதுரையில் இருந்து சதீஷ் அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் பொள்ளாச்சிக்கு புதன்கிழமை காலை காரில் வந்துள்ளனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து உடுமலை சாலையில் எதிரே சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சதீஷ் மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

மற்றொரு காரில் வந்த நஞ்சே கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான மற்றொரு​ கார்.

அவரது நண்பர் நாட்டுக்கல் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(40) என்பவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

மேலும் காரில் பயணம் செய்த சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →