முகப்பு
தமிழ்நாடு

அதிமுக சாா்பில் டிச.20-இல் கிறிஸ்துமஸ் பெருவிழா

அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


சென்னை: அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டனா்.

அதன் விவரம்:

அதிமுக சாா்பில் வரும் 20-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மைய கூட்ட அரங்கத்தில் விழா நடக்கவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அழைப்பாளா்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், விழாவில் பங்கேற்க வேண்டுமென அறிவிப்பில் அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →