முகப்பு
தமிழ்நாடு

புளியங்குடியில் சிலையைச் சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணி நிறுத்தம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலையைச் சுற்றி கம்பி வேலி அமைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
சிலையைச் சுற்றி நடைபெற்ற தூண்கள் அமைக்கும் பணி.
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலையைச் சுற்றி கம்பி வேலி அமைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலையைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொல்லம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி தினசரி சந்தை அருகேயுள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிலையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக சிலையைச் சுற்றிலும் தூண்கள் நிறுவும் பணி தொடங்கியது.

ஆனால், சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்க அரசு தெரிவித்துள்ள நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாகத் தூண்கள் அமைப்பதற்கு திமுக ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்குரைஞர் துரை நகராட்சி ஆணையர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசினார். இதையடுத்து பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததையடுத்து பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை கூறியது

தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கம்பி வேலி அமைக்க அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு முறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி புளியங்குடியில் உள்ள எம்ஜிஆர் சிலையைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

ஆனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலையைச் சுற்றிலும் பெரிய அளவிலான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுவதைப் பார்த்து அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். அவர் பணியைத் தாற்காலிகமாக நிறுத்த தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தீர்வு காணுமாறு தெரிவித்துள்ளார் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →