முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் 27 அம்மா மினி கிளினிக்: அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் 27 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கடலூரில் அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்
பகிர்:

கடலூர்: கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக முதல்வரால் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் துவங்கி வைக்கப்பட்டது.  அதன்படி கடலூர் மாவட்டத்தில் 27 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் வட்டம் திருப்பணாம் பாக்கத்தில் மினி கிளினிக்கை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ளவர்களையும் தேடிச் சென்று மருத்துவம் அளிப்பதுதான் அரசின் கடமை. அதனை தற்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பி.என்.ரமேஷ்பாபு, கடலூர் ஒன்றியக் குழுத் தலைவர் தெய்வ.பக்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →