கால ஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வேளாண்துறை சார்பில் காலஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடுகால ஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வேளாண்துறை சார்பில் காலஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வேளாண்துறை சார்பில் கால ஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினர்.
ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினர் கலந்துகொண்டு வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களான சொட்டு நீர்ப்பாசனம், திருந்திய நெல் சாகுபடி, பிரதம மந்திரி பயிர் காப்பீடு, கூட்டுப் பண்ணையம் , அட்மா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.