முகப்பு
தமிழ்நாடு

நீடாமங்கலம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு: மயக்கமடைந்த சிறுவனுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் உதவி

நீடாமங்கலத்தில் அம்மா கிளினிக் திறந்து வைத்து, அங்கு மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைபெற்ற சிறுவனை நலம் விசாரித்து மேல்சிக்சைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ஆர்.காமராஜ். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
நீடாமங்கலத்தில் அம்மா கிளினிக்கில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் ஆர்.காமராஜ். 
பகிர்:

நீடாமங்கலத்தில் அம்மா கிளினிக் திறந்து வைத்து, அங்கு மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைபெற்ற சிறுவனை நலம் விசாரித்து மேல்சிக்சைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ஆர்.காமராஜ். 

நீடாமங்கலம் வட்டம் புதுத்தேவங்குடியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம்.ஆர்.ராஜேந்திரன், கூட்டுறவு பால்வழங்கும் சங்க தலைவர் கோ.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் தேவைகளையறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ சேவை கிடைத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும், குக்கிராமங்களில் வாழும் மக்களின் நிலையறிந்தும் அவர்களை பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளருடன் தமிழக முழுவதும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தீட்டி அதனைத் தொடங்கி வைத்துள்ளார்கள். 

மேலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன், காய்ச்சல், உடல்வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்கின்ற வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. அந்தவகையில், இன்றையதினம் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட புதுத்தேவங்குடி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பெண்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.அவரது திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்ந்திடத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவருகிறது என்றார். 

விழாவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவராஜ் மாணிக்கம்,மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் டி.மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதிஜனகர், ஜெயசித்ராஅய்யாதுரை, கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

முன்னதாக சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் டாக்டர் கீதா வரவேற்றுப் பேசினார். நிறைவில் புதுத்தேவங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.கே.பிரபாகரன் நன்றி கூறினார். விழாவில் அமைச்சர் தனது பேச்சை தொடங்கிய போது மயக்கமடைந்த புதுத்தேவங்குடியைச் சேர்ந்த பிரதீப்(வயது10) என்ற சிறுவனை அவரது தந்தை சுரேஷ் புதிதாகத் திறக்கப்பட்ட முதலமைச்சரின் அம்மா கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக தூக்கி வந்தார்.

இதனைப்பார்த்த அமைச்சர் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார். அதன்படி சிறுவனுக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்தனர். விழா முடிந்தவுடன் சிறுவனை நேரில் பார்த்து அமைச்சர் நலம் விசாரித்தார். மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிறுவன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →