முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி சாலைமறியல் 

சிவகாசியில் சனிக்கிழமை அடிப்படை வசதி கோரி சாலை மறியல் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சிவகாசியில் அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

சிவகாசியில் சனிக்கிழமை அடிப்படை வசதி கோரி சாலை மறியல் நடைபெற்றது.

சிவகாசி நகராட்சிக்கு உள்பட்ட மாரிமுத்து தெரு பிச்சாண்டி தெரு, புது தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை. குடிநீர் வசதி கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிஸ சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் எனக் கோரி அந்த மூன்று தெரு மக்கள் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு இம்மானுவேல் ராஜசேகரன், காவல் ஆய்வாளர் ராஜா, நகராட்சி சுகாதார துறை அதிகாரி பேச்சிமுத்து ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கழிவுநீர் வாய்க்கால் உடனடியாக சுத்தம் செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →