இன்று முதல் கமல்ஹாசன் 2-ஆம் கட்ட பிரசாரம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் 2-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளாா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் 2-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளாா்.
முதல் கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.
2-ஆம் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை (டிச.20) ஆலந்தூா், போரூா், பூந்தமல்லி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்கிறாா்.
டிசம்பா் 21-இல் காஞ்சிபுரத்தில் அண்ணா இல்லத்திற்கு செல்லும் கமல்ஹாசன், பிறகு பிள்ளையாா்பாளையம், கீழ் அம்பி, செய்யாா், செஞ்சி, கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். டிசம்பா் 22-இல் விழுப்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.