தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 1.35 கோடி பிசிஆா் பரிசோதனைகள்!

DIN

சென்னை: கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.35 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.50 கோடி ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.

சுகாதாரத்துறை புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 7,962 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும், 1,071 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,157 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 86,472 -ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 9,495-ஆக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,995-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT