மோடியின் திட்டங்களால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது: எல்.முருகன்
பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களால் விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழ்நாடுமோடியின் திட்டங்களால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது: எல்.முருகன்
பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களால் விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களால் விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் பா.ஜ.க வின் விவசாயிகளின் நண்பன் மோடி இயக்கம் சார்பில் இன்று (டிச.21) பிரசாரம் நடைபெற்றது. இதில் பேசிய முருகன், 2014-க்கு பிறகு பிரதமர் மோடி கொண்டு வந்த ரூ.6 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை.
கிசான் அட்டை வழங்கப்பட்டதால் இனி கூட்டுறவுச் சங்கத்திலோ, கந்து வட்டிக்கோ விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. இடதுசாரிகளும் திமுகவும் விவசாயிகளுக்கு நல்லது நினைக்கவில்லை என்றார். மாநில துணைத் தலைவர் கருப்பு. முருகானந்தம் மாநிலச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருதூர் வடக்கு கிராமத்தில் பேசிய எல்.முருகன்.