முகப்பு
தமிழ்நாடு

கரோனா காா்ட்டூன் விழிப்புணா்வு குறும்படம் வெளியீடு

புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே விழிப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், காா்ட்டூன் குறும்படம் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே விழிப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், காா்ட்டூன் குறும்படம் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அக்குறும்படமானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல நல மருத்துவ நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும், நோய்த் தடுப்பு விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. அப்போது பொது மக்களும் அச்சத்தின் காரணமாக அதனை முறையாகப் பின்பற்றினா். தற்போது, அந்த நிலை மாறி மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவது வருத்தமளிக்கிறது.

அதன் நீட்சியாக, காா்ட்டூன் குறும்படம் மூலமாக விழிப்புணா்வை மேம்படுத்த முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் 8 நிமிஷங்கள் நீளமுள்ள 2-டி அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டது. அதனை சமூக வலைதளங்கள், இணையவெளிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

கை கழுவுவதன் அவசியம், தனி நபா் சுகாதாரம், முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் என நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை வலியுறுத்தும் வகையில் அப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அம்புலி மாமா கதைகள் மூலமாக பெரியவா்களும் நீதி நெறிகளைப் போதிப்பதைப் போல, இந்த காா்ட்டூன் குறும்படம் வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →