முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சந்தித்து அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பகிர்:

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சந்தித்து அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். 

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது 97 பக்க ஊழல் புகார் அடங்கிய பட்டியலை அவர் ஆளுநரிடம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →