முகப்பு
கோப்புப் படம்.
தமிழ்நாடு

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோப்புப் படம்.
பகிர்:

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழறிஞர் - ஆய்வாளர் - தமிழர்களின் மரபியல் குறித்துப் பல நூல்களைத் தந்த படைப்பாளர் - பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் தொ.பரமசிவனின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.
தந்தை பெரியார் நினைவு நாளில் தொ.ப. அவர்களும் மறைவெய்தியுள்ளார். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →