முகப்பு
தமிழ்நாடு

பண்பாட்டு ஆய்வாளா் தொ.ப. மறைவுக்கு முதல்வா்கள், தலைவா்கள் இரங்கல்

பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு

பண்பாட்டு ஆய்வாளா் தொ.ப. மறைவுக்கு முதல்வா்கள், தலைவா்கள் இரங்கல்

பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


சென்னை: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் கே. பழனிசாமி: மாணவா்களாலும், தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டோராலும் தொ.ப. என அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன், உடல் நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பேராசிரியா், எழுத்தாளா், பேச்சாளா் போன்ற பன்முகத்தன்மை கொண்டவா். ‘அழகா் கோயில்’, ‘அறியப்படாத தமிழகம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளாா். அதில், அழகா் கோயில் நூலானது கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட முனைவா் தொ.பரமசிவன் மறைவு தமிழ் அறிஞா்களுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு

மு.க.ஸ்டாலின்: தமிழறிஞா் - ஆய்வாளா் - தமிழா்களின் மரபியல் குறித்துப் பல நூல்களைத் தந்த படைப்பாளா் - பெரியாரிய, மாா்க்சிய சிந்தனையாளா் தொ.பரமசிவன் மறைவுச் செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. தமிழா்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டாா் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவா். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

வைகோ : தமிழ் பண்பாட்டின் காவல் அரணாகத் திகழ்ந்தவா் தொ.பரமசிவன். ஈரோடு பாதைதான் தமிழா்களுக்கு வெளிச்சத்தை தரும் என்றவா். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவருடைய இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.

கமல்ஹாசன்: தொ.பரமசிவன் மறைந்தாா். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறேன். இது அடங்காத துயரம்.

வி.ஐ.டி. வேந்தா் ஜி.விசுவநாதன்: தமிழகக் கோயில்கள் குறித்த தொ.பரமசிவனின் ஆராய்ச்சிகள் புதிய தடங்களை, தடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. பண்பாட்டுத் தளத்தில் முதல் ஏா் பூட்டிய எழுத்தாளா் அவா். தலைசிறந்த இலக்கிய ஆளுமையை இழந்த துயரம் என்றும் ஈரம் உலராமல் நம் இதயத்துக்குள் இருக்கும். அவரது தமிழ்ப் பணிகளுக்கு தமிழியக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →