டிச.28, 29-இல் கடலோரங்களில் மழை பெய்யக்கூடும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 3 நாள்களுக்கு பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
டிச.28, 29-இல் மழை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
வடக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.